Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts

Saturday, March 7, 2009

தமிழகத்துக்கு ஒரு நியாயம் மும்பைக்கு ஒரு நியாயமா?

நவம்பர் மாதம் 26 நாள் 2008 ஆம் வருடம் தீவிரவாதிகள் தாக்குதலால் நிலைகுலைந்தது மும்பை. சுமார் 200 மக்கள் உயிர் இழந்தனர் இதை ஒரு இந்தியனாக நான் மிகவும் வருத்தத்துடன் எடுத்து கொண்டேன். மும்பை மக்களுக்காக வருந்தினேன். அன்று ஒவ்வொரு இந்தியனும் இவ்வாறு தான் வருந்தி இருப்பான்.

அந்த சம்பவத்தின் விளைவாக இந்தியா பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விட்டது, அறிக்கை கொடுத்தது மேலும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து. இந்திய கிரிக்கெட் அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் பாத்துகாப்பு ஆனது இல்லை என்று கூறி அந்த பயணத்தை ரத்து செய்தது மத்திய அரசு. இதை அனைத்தையும் நான் வரவேற்கிறேன்.

ஆனால்.....இதை போன்ற நிலைமை இந்திய மக்களுக்கு அண்டை நாடான இலங்கையில் நடந்து கொண்டிருப்பதை இந்திய அரசு கொண்டு கொண்ட மாதிரி கூட தெரிய வில்லை.

இலங்கையில் இலங்கை அரசு விடுதலை புலிகளின் இடையே ஏற்பட்ட சண்டை காரணமாக நாள் தோறும் பல தமிழர்கள் கொலை செய்ய பட்டு வருகிறார்கள். இந்த நிலையை தமிழக தலைவர்கள் எவ்வளவோ எடுத்து உரைத்தும் மத்திய அரசு கண்டுகொண்ட மாதிரி தெரியவில்லை.

இந்நிலையில் பாகிஸ்தான் உடனான ஒப்பந்தம் செய்யப்பட்ட சுற்று பயணத்தை ரத்து செய்து விட்டு இந்திய கிரிக்கெட் அணியை மத்திய அரசு இலங்கைக்கு கிரிக்கெட் விளையாட அனுமதித்தது. இது எந்த விதத்தில் நியாயம்? மும்பை மக்களுக்கு ஒன்று என்ற உடன் துடித்து எழுந்த மத்திய அரசு தமிழர்களை கண்டுகொள்ள கூட இல்லை... மும்பை மக்களுக்கு ஒரு நியாயம் தமிழர்களுக்கு ஒரு நியாயமா? இந்திய அரசே விழித்துக்கொள்! தமிழ்நாடும் இந்தியாவில் தான் உள்ளது !