Showing posts with label கடவுள். Show all posts
Showing posts with label கடவுள். Show all posts

Wednesday, March 4, 2009

யார் யார் சிவம்? நீ நான் சிவம் பகுதி 2

கடவுளை பற்றி சொல்லி கொண்டிருந்தேன் அல்லவா? சரி உலகையே ஆட்டி
படைக்கும் கடவுளின் இருப்பிடமான கோவிலை பராமரிக்க 100 வேலையாட்கள் தேவை.....தன்னை தானே காத்துக்கொள்ள முடியாத கடவுள் உலகத்தை எப்படி காக்கும்?

கடவுள் இருப்பதாக நீங்கள் நம்புவதற்கு காரணம் புராணங்கள் தான். புராணம் என்றாலே கதைகள் என்று தான் சமஸ்கிரத்தில் பொருள். கடவுள் இருப்பதை உறுதிப்படுத்தும் கீதை, குரான், பைபிள், போன்ற நூல்கள் வனத்தில் இருந்து குதித்தனவா? இல்லையே ! அவைகளும் சாதாரன மனிதர்களால் தானே இயற்றப்பட்டன!

இன்று திருப்பதியில் ஒரு நாளுக்கு சுமார் 5 கோடி வருமானம் உண்டியல் முலமாக வருகின்றது. இந்தியாவில் உள்ள அனைத்து கோவில்களின் ஒரு நாள் வருமானத்தை கணக்கிட்டால் மயக்கமே வரும். அந்த பணம் யாருடையது? வெறும் கோடீஸ்வரர்கள் உடையாத? இல்லையே அதில் பாதி நம்மை போன்ற சாமானிய மக்கள் உடையது தான்.

இன்று கடவுள் தங்க வீட்டில் குளிர் சாதன அறையில் இருந்து கொண்டிருக்கிறார். ஆனால் அவர் காக்கவேண்டிய மக்களோ ஒரு வேலை உணவின்றி கடும் வெயிலிலும் மழையிலும் தவித்து கொண்டிருக்கின்றனர். கடவுள் உங்கள்ளுக்கு நிறைய செய்துகிட்டார் அல்லவா? நான் கடவுள் இல்லை என்று சொல்ல வரவில்லை. கடவுள்ளுக்காக நீங்கள் செய்யும் தேவையற்ற மூட பழக்கங்களை நிறுத்திகொள்ளுங்கள் என்று தான் சொல்கிறேன்.

நான் ஆத்திகன் இல்லை நான் பார்ப்பதை மட்டும் நம்புபவன் இதை ஆங்கிலத்தில் அக்நோச்டிசம் (agnostism) என்று கூறுவார்கள். என் நண்பன் ஒருவன் தேர்வு அறையில் பல சாமி படங்களை வைத்துக்கொண்டு பூஜை செய்து கொண்டிருந்தான். நான் ஒய் அவனிடம் என்ன செய்கிறாய் என்று கேட்டான் அகன் " நான் பரிட்சையில் தேர்வு பெற இறைவனை வேண்டிகொண்டிருக்கிறேன்" என்றான். தேர்வு ஆரம்பித்தது வினாத்தாள் மிகவும் கடினம். அவன் தேர்வில் தேர்வு பெறவில்லை. கடவுள் அவனை கைவிட்டுவிட்டரா? இல்லை....அவன் தேர்வுக்கு கடவுளை நம்பாமல் அவனை நம்பி இருந்தால் அவன் தேர்வு பெற்றுஇருப்பான்.

உன்னை நம்பு நீ வெற்றி பெறுவாய் . உன்னை நம்பினால் நீ கடவுளை நம்புவதற்கு சமம். ஏன்? "யார் யார் சிவம்? நீ நான் சிவம்"

யார் யார் சிவம்? நீ நான் சிவம் பகுதி 1

"யார் யார் சிவம்? நீ நான் சிவம்
வாழ்வே தவம், அன்பே சிவம்

ஆத்திகம் பேசும் அடியார்கேல்லாம் சிவமே அன்பாகும்
நாத்திகம் பேசும் நல்லவருக்கொஎ அன்பே சிவமாகும்

அன்பே சிவம் அன்பே சிவம் என்றும்
அன்பே சிவம் அன்பே சிவம் எங்கும்
அன்பே சிவம் அன்பே சிவம் என்றும்
அன்பே சிவம் அன்பே சிவம் எங்கும்

யார் யார் சிவம்? நீ நான் சிவம்
வாழ்வே தவம், அன்பே சிவம்

யார் யார் சிவம்? நீ நான் சிவம்
வாழ்வே தவம், அன்பே சிவம்

இதயம் என்பது சதைதான் என்றால் எரிதழல் தின்றுவிடும்
அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்

அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்

யார் யார் சிவம்? நீ நான் சிவம்

அன்பே சிவம் அன்பே சிவம் என்றும்
அன்பே சிவம் அன்பே சிவம் எங்கும்
அன்பே சிவம் அன்பே சிவம் என்றும்
அன்பே சிவம் அன்பே சிவம் எங்கும்

யார் யார் சிவம்? நீ நான் சிவம்

அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவே இல்லையடா
மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா

அன்பே சிவம் அன்பே சிவம் என்றும்
அன்பே சிவம் அன்பே சிவம் எங்கும்
அன்பே சிவம் அன்பே சிவம் என்றும்

இந்த பாடலை கேட்டு நான் கண் கலங்கினேன். கமல் ஹாசன் என்ற மாபெரும் கலைஞனின் திறமையை தமிழ் நாடு கண்டுகொள்ளவில்லை. "அன்பே சிவம்" என்ற அற்புதமான இந்த திரைப்படம் வர்த்தக ரீதியில் வெற்றி பெறவில்லை. இந்த படத்தை கமல் ஆங்கிலத்தில் எடுத்து இருந்தால் நிச்சயம் ஆஸ்கார் விருது பெற்று இருக்கும். ஆனால் தமிழ் நாட்டில் இப்படம் 100 நாட்கள் கூட ஓடவில்லை

யார் கடவுள்? பிறருக்காக வாழ்பவன் தான் கடவுள். அதை தான் நாம் தவறாக புரிந்து கொண்டுள்ளோம். எந்த கடவுளும் எனக்கு பணம் கொடு, மொட்டை அடி, காவடி எடு , பிரியாணி சமை என்றெல்லாம் கூறவில்லை. நாம் என் இதை தவறாக புரிந்து கொண்டுள்ளோம்? என் தவறுதலை செய்து பிறரையும் கெடுக்கிறோம்?

கடவுள் இல்லை என்றால் உன் எதிரில் இருப்பவன் உன்னை கேட்கும் முதல் கேள்வி "கடவுள் இல்லை என்றால் நீ எப்படி உருவானாய் ?"என்பது தான் . அறிவியல் தெரியாமல் பேசக்கூடாது. மனித இனம் உருவானது ஒரு மாற்றம் தான். ஒரு செல் உயிரியில் இருந்து மீன், மான், குரங்கு, மனிதன் என்று உருவானது தான் மனித இனம் உருவானது.

தொடரும்........