Showing posts with label மூட நம்பிக்கை. Show all posts
Showing posts with label மூட நம்பிக்கை. Show all posts

Wednesday, March 4, 2009

யார் யார் சிவம்? நீ நான் சிவம் பகுதி 1

"யார் யார் சிவம்? நீ நான் சிவம்
வாழ்வே தவம், அன்பே சிவம்

ஆத்திகம் பேசும் அடியார்கேல்லாம் சிவமே அன்பாகும்
நாத்திகம் பேசும் நல்லவருக்கொஎ அன்பே சிவமாகும்

அன்பே சிவம் அன்பே சிவம் என்றும்
அன்பே சிவம் அன்பே சிவம் எங்கும்
அன்பே சிவம் அன்பே சிவம் என்றும்
அன்பே சிவம் அன்பே சிவம் எங்கும்

யார் யார் சிவம்? நீ நான் சிவம்
வாழ்வே தவம், அன்பே சிவம்

யார் யார் சிவம்? நீ நான் சிவம்
வாழ்வே தவம், அன்பே சிவம்

இதயம் என்பது சதைதான் என்றால் எரிதழல் தின்றுவிடும்
அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்

அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்

யார் யார் சிவம்? நீ நான் சிவம்

அன்பே சிவம் அன்பே சிவம் என்றும்
அன்பே சிவம் அன்பே சிவம் எங்கும்
அன்பே சிவம் அன்பே சிவம் என்றும்
அன்பே சிவம் அன்பே சிவம் எங்கும்

யார் யார் சிவம்? நீ நான் சிவம்

அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவே இல்லையடா
மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா

அன்பே சிவம் அன்பே சிவம் என்றும்
அன்பே சிவம் அன்பே சிவம் எங்கும்
அன்பே சிவம் அன்பே சிவம் என்றும்

இந்த பாடலை கேட்டு நான் கண் கலங்கினேன். கமல் ஹாசன் என்ற மாபெரும் கலைஞனின் திறமையை தமிழ் நாடு கண்டுகொள்ளவில்லை. "அன்பே சிவம்" என்ற அற்புதமான இந்த திரைப்படம் வர்த்தக ரீதியில் வெற்றி பெறவில்லை. இந்த படத்தை கமல் ஆங்கிலத்தில் எடுத்து இருந்தால் நிச்சயம் ஆஸ்கார் விருது பெற்று இருக்கும். ஆனால் தமிழ் நாட்டில் இப்படம் 100 நாட்கள் கூட ஓடவில்லை

யார் கடவுள்? பிறருக்காக வாழ்பவன் தான் கடவுள். அதை தான் நாம் தவறாக புரிந்து கொண்டுள்ளோம். எந்த கடவுளும் எனக்கு பணம் கொடு, மொட்டை அடி, காவடி எடு , பிரியாணி சமை என்றெல்லாம் கூறவில்லை. நாம் என் இதை தவறாக புரிந்து கொண்டுள்ளோம்? என் தவறுதலை செய்து பிறரையும் கெடுக்கிறோம்?

கடவுள் இல்லை என்றால் உன் எதிரில் இருப்பவன் உன்னை கேட்கும் முதல் கேள்வி "கடவுள் இல்லை என்றால் நீ எப்படி உருவானாய் ?"என்பது தான் . அறிவியல் தெரியாமல் பேசக்கூடாது. மனித இனம் உருவானது ஒரு மாற்றம் தான். ஒரு செல் உயிரியில் இருந்து மீன், மான், குரங்கு, மனிதன் என்று உருவானது தான் மனித இனம் உருவானது.

தொடரும்........