Saturday, March 7, 2009
தமிழகத்துக்கு ஒரு நியாயம் மும்பைக்கு ஒரு நியாயமா?
அந்த சம்பவத்தின் விளைவாக இந்தியா பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விட்டது, அறிக்கை கொடுத்தது மேலும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து. இந்திய கிரிக்கெட் அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் பாத்துகாப்பு ஆனது இல்லை என்று கூறி அந்த பயணத்தை ரத்து செய்தது மத்திய அரசு. இதை அனைத்தையும் நான் வரவேற்கிறேன்.
ஆனால்.....இதை போன்ற நிலைமை இந்திய மக்களுக்கு அண்டை நாடான இலங்கையில் நடந்து கொண்டிருப்பதை இந்திய அரசு கொண்டு கொண்ட மாதிரி கூட தெரிய வில்லை.
இலங்கையில் இலங்கை அரசு விடுதலை புலிகளின் இடையே ஏற்பட்ட சண்டை காரணமாக நாள் தோறும் பல தமிழர்கள் கொலை செய்ய பட்டு வருகிறார்கள். இந்த நிலையை தமிழக தலைவர்கள் எவ்வளவோ எடுத்து உரைத்தும் மத்திய அரசு கண்டுகொண்ட மாதிரி தெரியவில்லை.
இந்நிலையில் பாகிஸ்தான் உடனான ஒப்பந்தம் செய்யப்பட்ட சுற்று பயணத்தை ரத்து செய்து விட்டு இந்திய கிரிக்கெட் அணியை மத்திய அரசு இலங்கைக்கு கிரிக்கெட் விளையாட அனுமதித்தது. இது எந்த விதத்தில் நியாயம்? மும்பை மக்களுக்கு ஒன்று என்ற உடன் துடித்து எழுந்த மத்திய அரசு தமிழர்களை கண்டுகொள்ள கூட இல்லை... மும்பை மக்களுக்கு ஒரு நியாயம் தமிழர்களுக்கு ஒரு நியாயமா? இந்திய அரசே விழித்துக்கொள்! தமிழ்நாடும் இந்தியாவில் தான் உள்ளது !
Wednesday, March 4, 2009
யார் யார் சிவம்? நீ நான் சிவம் பகுதி 2
படைக்கும் கடவுளின் இருப்பிடமான கோவிலை பராமரிக்க 100 வேலையாட்கள் தேவை.....தன்னை தானே காத்துக்கொள்ள முடியாத கடவுள் உலகத்தை எப்படி காக்கும்?
கடவுள் இருப்பதாக நீங்கள் நம்புவதற்கு காரணம் புராணங்கள் தான். புராணம் என்றாலே கதைகள் என்று தான் சமஸ்கிரத்தில் பொருள். கடவுள் இருப்பதை உறுதிப்படுத்தும் கீதை, குரான், பைபிள், போன்ற நூல்கள் வனத்தில் இருந்து குதித்தனவா? இல்லையே ! அவைகளும் சாதாரன மனிதர்களால் தானே இயற்றப்பட்டன!
இன்று திருப்பதியில் ஒரு நாளுக்கு சுமார் 5 கோடி வருமானம் உண்டியல் முலமாக வருகின்றது. இந்தியாவில் உள்ள அனைத்து கோவில்களின் ஒரு நாள் வருமானத்தை கணக்கிட்டால் மயக்கமே வரும். அந்த பணம் யாருடையது? வெறும் கோடீஸ்வரர்கள் உடையாத? இல்லையே அதில் பாதி நம்மை போன்ற சாமானிய மக்கள் உடையது தான்.
இன்று கடவுள் தங்க வீட்டில் குளிர் சாதன அறையில் இருந்து கொண்டிருக்கிறார். ஆனால் அவர் காக்கவேண்டிய மக்களோ ஒரு வேலை உணவின்றி கடும் வெயிலிலும் மழையிலும் தவித்து கொண்டிருக்கின்றனர். கடவுள் உங்கள்ளுக்கு நிறைய செய்துகிட்டார் அல்லவா? நான் கடவுள் இல்லை என்று சொல்ல வரவில்லை. கடவுள்ளுக்காக நீங்கள் செய்யும் தேவையற்ற மூட பழக்கங்களை நிறுத்திகொள்ளுங்கள் என்று தான் சொல்கிறேன்.
நான் ஆத்திகன் இல்லை நான் பார்ப்பதை மட்டும் நம்புபவன் இதை ஆங்கிலத்தில் அக்நோச்டிசம் (agnostism) என்று கூறுவார்கள். என் நண்பன் ஒருவன் தேர்வு அறையில் பல சாமி படங்களை வைத்துக்கொண்டு பூஜை செய்து கொண்டிருந்தான். நான் ஒய் அவனிடம் என்ன செய்கிறாய் என்று கேட்டான் அகன் " நான் பரிட்சையில் தேர்வு பெற இறைவனை வேண்டிகொண்டிருக்கிறேன்" என்றான். தேர்வு ஆரம்பித்தது வினாத்தாள் மிகவும் கடினம். அவன் தேர்வில் தேர்வு பெறவில்லை. கடவுள் அவனை கைவிட்டுவிட்டரா? இல்லை....அவன் தேர்வுக்கு கடவுளை நம்பாமல் அவனை நம்பி இருந்தால் அவன் தேர்வு பெற்றுஇருப்பான்.
உன்னை நம்பு நீ வெற்றி பெறுவாய் . உன்னை நம்பினால் நீ கடவுளை நம்புவதற்கு சமம். ஏன்? "யார் யார் சிவம்? நீ நான் சிவம்"
யார் யார் சிவம்? நீ நான் சிவம் பகுதி 1
"யார் யார் சிவம்? நீ நான் சிவம்
வாழ்வே தவம், அன்பே சிவம்
ஆத்திகம் பேசும் அடியார்கேல்லாம் சிவமே அன்பாகும்
நாத்திகம் பேசும் நல்லவருக்கொஎ அன்பே சிவமாகும்
அன்பே சிவம் அன்பே சிவம் என்றும்
அன்பே சிவம் அன்பே சிவம் எங்கும்
அன்பே சிவம் அன்பே சிவம் என்றும்
அன்பே சிவம் அன்பே சிவம் எங்கும்
யார் யார் சிவம்? நீ நான் சிவம்
வாழ்வே தவம், அன்பே சிவம்
யார் யார் சிவம்? நீ நான் சிவம்
வாழ்வே தவம், அன்பே சிவம்
இதயம் என்பது சதைதான் என்றால் எரிதழல் தின்றுவிடும்
அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்
அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்
யார் யார் சிவம்? நீ நான் சிவம்
அன்பே சிவம் அன்பே சிவம் என்றும்
அன்பே சிவம் அன்பே சிவம் எங்கும்
அன்பே சிவம் அன்பே சிவம் என்றும்
அன்பே சிவம் அன்பே சிவம் எங்கும்
யார் யார் சிவம்? நீ நான் சிவம்
அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவே இல்லையடா
மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா
அன்பே சிவம் அன்பே சிவம் என்றும்
அன்பே சிவம் அன்பே சிவம் எங்கும்
அன்பே சிவம் அன்பே சிவம் என்றும்
இந்த பாடலை கேட்டு நான் கண் கலங்கினேன். கமல் ஹாசன் என்ற மாபெரும் கலைஞனின் திறமையை தமிழ் நாடு கண்டுகொள்ளவில்லை. "அன்பே சிவம்" என்ற அற்புதமான இந்த திரைப்படம் வர்த்தக ரீதியில் வெற்றி பெறவில்லை. இந்த படத்தை கமல் ஆங்கிலத்தில் எடுத்து இருந்தால் நிச்சயம் ஆஸ்கார் விருது பெற்று இருக்கும். ஆனால் தமிழ் நாட்டில் இப்படம் 100 நாட்கள் கூட ஓடவில்லை
யார் கடவுள்? பிறருக்காக வாழ்பவன் தான் கடவுள். அதை தான் நாம் தவறாக புரிந்து கொண்டுள்ளோம். எந்த கடவுளும் எனக்கு பணம் கொடு, மொட்டை அடி, காவடி எடு , பிரியாணி சமை என்றெல்லாம் கூறவில்லை. நாம் என் இதை தவறாக புரிந்து கொண்டுள்ளோம்? என் தவறுதலை செய்து பிறரையும் கெடுக்கிறோம்?
கடவுள் இல்லை என்றால் உன் எதிரில் இருப்பவன் உன்னை கேட்கும் முதல் கேள்வி "கடவுள் இல்லை என்றால் நீ எப்படி உருவானாய் ?"என்பது தான் . அறிவியல் தெரியாமல் பேசக்கூடாது. மனித இனம் உருவானது ஒரு மாற்றம் தான். ஒரு செல் உயிரியில் இருந்து மீன், மான், குரங்கு, மனிதன் என்று உருவானது தான் மனித இனம் உருவானது.
தொடரும்........
Monday, March 2, 2009
இந்திய சினிமாவின் இன்றைய நிலை
தமிழ் சினிமாவை பற்றி பேசும் அதிகாரம் என்னிடம் இல்லை என்றாலும் ஒரு தமிழ் குடிமகன் என்ற உரிமை என்னிடம் நிறையவே உள்ளது. முதலில் இந்திய சினிமா நல்ல முன்னேற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது என்பதை நான் ஒத்துக்கொள்ளவேண்டும். குறிப்பாக ஹிந்தி திரை படங்கள் சில மிகவும் சிறப்பாக சிரத்தையுடன் எடுக்க பட்டுள்ளன.
சென்ற வருடம் வெளியான "தாரே சம்மீன் பர்" (Taare zammen par ) , மற்றும் அதற்க்கு முந்தைய வருடங்களில் வெளியான "Black", "Rang De Basanthi" pondra திரைப்படங்கள் நெஞ்கை தொடுவான போல இருந்தன.
ஆனாலும் இந்திய சினிமாவின் சில பெரிய நடிகர்களால் நாம் இன்றும் பின்னோக்கி தான் சென்றுகொண்டிருக்கிரோம். குறிப்பாக தமிழ் திரைப்படங்களின் தரம் குறைந்து கொண்டே வருகின்றது . சென்ற வருடம் வெளிவந்த படங்களில் "வாரணம் ஆயிரம்", "சுப்ரமணியபுரம்" போன்ற படங்கள் மட்டுமே சொல்லும்படி அமைந்தன. சற்று வெளிபடையாக சொல்ல வேண்டும் என்றால் "விஜய்", "விஷால்" போன்ற நடிகர்களால் தான் இந்த நிலை ஏற்பட்டு இருக்கின்றது என்றே கூறலாம்.
தமிழ் சினிமாவின் முதன்மை நாயகனாக வலம் வரும் விஜய் நடித்து வெளி வந்த "குருவி", "வில்லு" போன்ற படங்கள் மிக கேவலமாக இருந்தன. சற்றும் எதார்த்தம் இல்லாமல் ஒரு பாமரன் எடுத்த படம் போல இருந்தன. தமிழ் சினிமாவின் மீது அக்கறை இருந்திருந்தால் நடிகர் விஜய் இது போன்ற படங்களில் நடித்து இருக்க மாட்டார் . ஒரு பாலத்தில் இருந்து பறந்து சென்று புகைவண்டியை பிடிப்பது என்பது எல்லாம் இளைஞர்கள் மனதில் ஒரு தப்பான என்னத்தை உண்டாக்கும் .
ஆகவே சற்றும் எதார்த்தம் இல்லாத கழட்ட சினிமா கலாச்சாரத்தை நாம் கைவிடவேண்டும். அது நமக்கு எந்த நம்மையையும் செய்ய போவது இல்லை. ஒரு திரைப்படம் பதல் அது நமக்கு ஏதேனும் ஒரு கருத்தை சொல்ல வேண்டும். வெறும் ஆடி பாடி கூத்தடிக்கும் சினிமாவை இனிமேலும் வளர்க்கக்கூடாது. அது நாம் நாட்டை தவறான முறையில் வெளிப்படுத்துவது மட்டும் அல்லாமல் நம் அடுத்த தலைமுறையினரையும் நாம் செய்த தவறை செய்ய வைக்கும்.
அதை புரிந்து இன்றைய இளம் நடிகர்களும் நடிகைகளும் ஒழுங்கான எதார்த்தமான சினிமாவை வளர்க்க வேண்டும்.